• May 14 2026

டிரம்பை நேரில் வரவேற்ற சீன அதிபர்-போரை முடிக்கப் போகிறதா 'வல்லரசு' கூட்டணி!

Ziya / May 14th 2026, 9:56 am
image

உலக அரசியலின் இரு பெரும் சக்திகளான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கில் நேருக்கு நேர் சந்தித்தனர்.


பெய்ஜிங்கில் உள்ள முக்கிய மாளிகையில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன


மத்திய கிழக்கில் அனல் பறந்து வரும் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் சூழலைத் தணிப்பது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து சீனாவின் உதவியை டிரம்ப் நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவும் வர்த்தகப் போர் மற்றும் சுங்க வரி விதிப்புகள் குறித்து ஒரு சுமுகமான முடிவை எட்ட இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.


உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் எரிசக்தி பற்றாக்குறை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.


இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார்களா? அல்லது முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்களா? என்பது குறித்து சர்வதேச நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. 

டிரம்பை நேரில் வரவேற்ற சீன அதிபர்-போரை முடிக்கப் போகிறதா 'வல்லரசு' கூட்டணி உலக அரசியலின் இரு பெரும் சக்திகளான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கில் நேருக்கு நேர் சந்தித்தனர்.பெய்ஜிங்கில் உள்ள முக்கிய மாளிகையில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளனமத்திய கிழக்கில் அனல் பறந்து வரும் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் சூழலைத் தணிப்பது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து சீனாவின் உதவியை டிரம்ப் நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவும் வர்த்தகப் போர் மற்றும் சுங்க வரி விதிப்புகள் குறித்து ஒரு சுமுகமான முடிவை எட்ட இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் எரிசக்தி பற்றாக்குறை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார்களா அல்லது முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்களா என்பது குறித்து சர்வதேச நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement