• Nov 12 2026

பறக்கும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் சீனா

Ziya / Nov 12th 2026, 9:36 am
image

எதிர்காலப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பறக்கும் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சீனாவின் எக்ஸ்பெங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

லிஸ்பனில் நடைபெற்ற வலை உச்சி மாநாட்டில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டெலி ஜாவோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த வாகனம் வழக்கமான கார்களைப் போன்று சக்கரங்களைக் கொண்டிருக்காது. மாறாக, மின்சாரத்தில் இயங்கும் ஆறு விசிறிகளின் உதவியுடன் தரையிலிருந்து மேலெழுந்து பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோமீற்றர் உயரம் வரை பறக்கக்கூடிய இந்த வாகனம், தற்போது ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 30 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை ஜாய்ஸ்டிக் மூலம் இயக்குவதுடன், குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தானாகவே பறக்கும் வசதியும் கொண்டுள்ளது. இதனை ஐந்து நிமிடங்களில் இயக்கக் கற்றுக்கொடுக்க முடியும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இந்த வாகனத்தின் விலை சுமார் 3 இலட்சம் அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இதன் பயன்பாடு அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மட்டுமன்றி, அவசரகால சேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் சுமார் 20 நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தனது சந்தையை விரிவுபடுத்த எக்ஸ்பெங் நிறுவனம் முயற்சித்து வருகிறது.


பறக்கும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் சீனா எதிர்காலப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பறக்கும் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சீனாவின் எக்ஸ்பெங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.லிஸ்பனில் நடைபெற்ற வலை உச்சி மாநாட்டில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டெலி ஜாவோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த வாகனம் வழக்கமான கார்களைப் போன்று சக்கரங்களைக் கொண்டிருக்காது. மாறாக, மின்சாரத்தில் இயங்கும் ஆறு விசிறிகளின் உதவியுடன் தரையிலிருந்து மேலெழுந்து பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோமீற்றர் உயரம் வரை பறக்கக்கூடிய இந்த வாகனம், தற்போது ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 30 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதனை ஜாய்ஸ்டிக் மூலம் இயக்குவதுடன், குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தானாகவே பறக்கும் வசதியும் கொண்டுள்ளது. இதனை ஐந்து நிமிடங்களில் இயக்கக் கற்றுக்கொடுக்க முடியும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.இந்த வாகனத்தின் விலை சுமார் 3 இலட்சம் அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இதன் பயன்பாடு அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மட்டுமன்றி, அவசரகால சேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.சீனாவில் சுமார் 20 நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தனது சந்தையை விரிவுபடுத்த எக்ஸ்பெங் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement