இலங்கையின் சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமாக உயிரினங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், அனைவரும் சீனப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரகசியத் தகவலையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின்போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
இதன்போது, சுமார் 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஊர்வன மற்றும் பூச்சிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கலவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட உயிரினங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய அருங்காட்சியகத்துக்கு அனுப்பவும், பின்னர் அவற்றை மீண்டும் இயற்கைச் சூழலில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் பபவ உத்தரகந்த வனப்பகுதியில் மரபணு திருட்டு குற்றச்சாட்டில் ஜெர்மனியர்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வனப்பகுதிகளில் என்ன நடக்கிறது அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டவர்கள் இலங்கையின் சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமாக உயிரினங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், அனைவரும் சீனப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.இரகசியத் தகவலையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின்போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.இதன்போது, சுமார் 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஊர்வன மற்றும் பூச்சிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், கலவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட உயிரினங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய அருங்காட்சியகத்துக்கு அனுப்பவும், பின்னர் அவற்றை மீண்டும் இயற்கைச் சூழலில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் பபவ உத்தரகந்த வனப்பகுதியில் மரபணு திருட்டு குற்றச்சாட்டில் ஜெர்மனியர்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.