நாடு முழுவதும் நிலவிய வறட்சியான வானிலை மாற்றமடைய உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உஷ்ணமான வானிலை தொடரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்கரைப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு நாடு முழுவதும் நிலவிய வறட்சியான வானிலை மாற்றமடைய உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உஷ்ணமான வானிலை தொடரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.களுத்துறை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்கரைப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் காற்று வீசும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.