• May 06 2025

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு..!

Sharmi / May 5th 2025, 1:59 pm
image

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு இன்றையதினம் (5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பதுளை நீதவான் நுஜித் டி சில்வாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.இந்தநிலையில், குறித்த வழக்கு இன்றையதினம் (5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பதுளை நீதவான் நுஜித் டி சில்வாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement