• Apr 23 2026

தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Ziya / Apr 21st 2026, 4:19 pm
image

கல்வி அமைச்சின் மூலமாக செயற்படுத்தப்பட்டு வரும் விசேட தொழிற் பயிற்சி வழிகாட்டி குறுகிய பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (21) பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்றது.


தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியை உள்ளடக்கிய சிராஜ் முஸ்லீம் வித்தியாலயத்தில் இடம் பெற்ற பாடநெறியை சுமார் 29 மாணவர்கள் பூர்த்தி செய்தனர்.


மூன்று மாத கால பாடநெறியை கொண்ட இதில் ஆங்கிலம்,கணணி,தொழில் வழிகாட்டல் உள்ளிட்ட பாடநெறிகள்  உள்ளடக்கப்பட்டிருந்தன. 


உயர் தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்காக மூன்றாம் நிலை கல்விக்கான ஒரு அடித்தளமாக இது காணப்படுகிறது.


இதன் மூலம் மாணவர்களின் எதிர்கால துறை சார் வழி காட்டல் தெரிவுகளை மேற்கொண்டு தொழில் தகைமை கொண்டவர்களாக மாறுவதற்கான ஊக்குவிப்பாக இப் பாடநெறி காணப்படுகிறது.


இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், திறன் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐங்கரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் மூலமாக செயற்படுத்தப்பட்டு வரும் விசேட தொழிற் பயிற்சி வழிகாட்டி குறுகிய பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (21) பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியை உள்ளடக்கிய சிராஜ் முஸ்லீம் வித்தியாலயத்தில் இடம் பெற்ற பாடநெறியை சுமார் 29 மாணவர்கள் பூர்த்தி செய்தனர்.மூன்று மாத கால பாடநெறியை கொண்ட இதில் ஆங்கிலம்,கணணி,தொழில் வழிகாட்டல் உள்ளிட்ட பாடநெறிகள்  உள்ளடக்கப்பட்டிருந்தன. உயர் தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்காக மூன்றாம் நிலை கல்விக்கான ஒரு அடித்தளமாக இது காணப்படுகிறது.இதன் மூலம் மாணவர்களின் எதிர்கால துறை சார் வழி காட்டல் தெரிவுகளை மேற்கொண்டு தொழில் தகைமை கொண்டவர்களாக மாறுவதற்கான ஊக்குவிப்பாக இப் பாடநெறி காணப்படுகிறது.இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், திறன் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐங்கரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement