• Oct 06 2026

காங்கேசன்துறை விடுவிக்கப்பட்ட காணியில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Aathira / Oct 5th 2026, 8:54 pm
image

காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளதாவது,

விடுவிக்கப்பட்டுள்ள காணிப் பகுதியில் சிமெந்து பொதியிடல் மற்றும் விநியோகம் தொடர்பான கைத்தொழிலை முன்னெடுப்பதே தமது திட்டமாகும்.

குறித்த பகுதியில் இருந்து எவ்வித மூலப்பொருட்களையும் அகழ்ந்தெடுக்காமல், இந்தியாவில் இருந்து சிமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றை கலந்து சிமெந்து தயாரித்து அங்கிருந்தே விநியோகம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான முதலீட்டை மேற்கொள்ள ஏற்கனவே முதலீட்டாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும், குறித்த முதலீட்டாளரின் திட்ட மதிப்பீடு ஏற்கனவே முதலீட்டு ஊக்குவிப்புச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்திட்ட மதிப்பீடு மீண்டும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை பகுதியில் முன்மொழியப்படும் இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் 1,000 பேருக்காவது நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் ஒத்துழைப்பை தாம் பெரிதும் மதிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


காங்கேசன்துறை விடுவிக்கப்பட்ட காணியில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளதாவது,விடுவிக்கப்பட்டுள்ள காணிப் பகுதியில் சிமெந்து பொதியிடல் மற்றும் விநியோகம் தொடர்பான கைத்தொழிலை முன்னெடுப்பதே தமது திட்டமாகும்.குறித்த பகுதியில் இருந்து எவ்வித மூலப்பொருட்களையும் அகழ்ந்தெடுக்காமல், இந்தியாவில் இருந்து சிமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றை கலந்து சிமெந்து தயாரித்து அங்கிருந்தே விநியோகம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்கான முதலீட்டை மேற்கொள்ள ஏற்கனவே முதலீட்டாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும், குறித்த முதலீட்டாளரின் திட்ட மதிப்பீடு ஏற்கனவே முதலீட்டு ஊக்குவிப்புச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்திட்ட மதிப்பீடு மீண்டும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.காங்கேசன்துறை பகுதியில் முன்மொழியப்படும் இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் 1,000 பேருக்காவது நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் ஒத்துழைப்பை தாம் பெரிதும் மதிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement