• Sep 15 2025

விமான விபத்துக்களிலிருந்து இனி உயிர் தப்பலாமா..? வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு எயார் பேக்

Chithra / Sep 15th 2025, 8:42 am
image

 

விமான விபத்தில் இருந்து உயிர் பிழைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு எயார் பேக் (AIR BAG) வடிவமைக்கப்பட்டுள்ளது.


பிட்ஸ் (BITS) பல்கலைக்கழகத்தின் டுபாய் வளாகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களான தர்சன் ஸ்ரீனிவாசன் மற்றும் எஷெல் வாசிம் ஆகியோர் குறித்த எயார் பேக்கை வடிவமைத்துள்ளனர்.

நடுவானில் விமானம் செயலிழந்தால், விமானம் கீழே விழும் வேகத்தைக் குறைத்து தரையில் மோதாமல் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்கும் வகையிலும் குறித்த எயார் பேக் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த கண்டுபிடிப்பு உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளைக் கௌரவிக்கும் மதிப்புமிக்க ஜேம்ஸ் டைசன் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விமான விபத்துக்களிலிருந்து இனி உயிர் தப்பலாமா. வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு எயார் பேக்  விமான விபத்தில் இருந்து உயிர் பிழைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு எயார் பேக் (AIR BAG) வடிவமைக்கப்பட்டுள்ளது.பிட்ஸ் (BITS) பல்கலைக்கழகத்தின் டுபாய் வளாகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களான தர்சன் ஸ்ரீனிவாசன் மற்றும் எஷெல் வாசிம் ஆகியோர் குறித்த எயார் பேக்கை வடிவமைத்துள்ளனர்.நடுவானில் விமானம் செயலிழந்தால், விமானம் கீழே விழும் வேகத்தைக் குறைத்து தரையில் மோதாமல் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்கும் வகையிலும் குறித்த எயார் பேக் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்த கண்டுபிடிப்பு உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளைக் கௌரவிக்கும் மதிப்புமிக்க ஜேம்ஸ் டைசன் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement