கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) காலை 6:50 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 54 வயதுடைய ஊழியர் ஆவார்.
5.941 கிலோ எடையுள்ள 24 கரட் தங்க பிஸ்கட்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மதிப்பு 210.5 மில்லியன் ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்க பிஸ்கட்டுக்களை காலுறைக்குள் வைத்து கடத்த முயன்ற ஊழியர்; கட்டுநாயக்கவில் பரபரப்புச் சம்பவம் கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று (14) காலை 6:50 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 54 வயதுடைய ஊழியர் ஆவார். 5.941 கிலோ எடையுள்ள 24 கரட் தங்க பிஸ்கட்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மதிப்பு 210.5 மில்லியன் ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.