• May 23 2026

பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்து - பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு!

shanu / Jun 21st 2025, 11:37 pm
image

பதுளையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாகப் பதிவாகியுள்ளது. 


பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். 


விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

  

விபத்தில்  காயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்து - பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு பதுளையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாகப் பதிவாகியுள்ளது. பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.  விபத்தில்  காயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement