• Apr 23 2026

திருமலையில் மரத்துடன் மோதிய பேருந்து; பயணிகள் பலர் காயம்

Chithra / Apr 22nd 2026, 8:36 pm
image

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கைப்பாலத்தருகில் தனியார் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.


திருகோணமலை மூதூர் வரையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூருக்கு பயணிக்கும் போதே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 


இதில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்து கிண்ணியா மற்றும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.


மரத்துடன் தாழ் நிலப்பகுதியில் மோதுண்ட பேருந்து டிப்பர் வாகனம் ஊடாக மீட்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


திருமலையில் மரத்துடன் மோதிய பேருந்து; பயணிகள் பலர் காயம் திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கைப்பாலத்தருகில் தனியார் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.திருகோணமலை மூதூர் வரையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூருக்கு பயணிக்கும் போதே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்து கிண்ணியா மற்றும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.மரத்துடன் தாழ் நிலப்பகுதியில் மோதுண்ட பேருந்து டிப்பர் வாகனம் ஊடாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement