• Apr 14 2026

மட்டக்குளியில் பேருந்து விபத்து – 10 வயது மாணவி உயிரிழப்பு

Aathira / Apr 11th 2026, 9:36 am
image

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி நேற்று (10) நண்பகல், பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற போது, அதே பேருந்து மீண்டும் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளியில் பேருந்து விபத்து – 10 வயது மாணவி உயிரிழப்பு மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி நேற்று (10) நண்பகல், பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற போது, அதே பேருந்து மீண்டும் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement