வெள்ளத்தில் சிக்கிய எருமையை கடல் வழியே கடற்படையினர் மீட்டுச் செல்லும் காட்சி நெகிழவைத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தப் பாதிப்புக்களின் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி எருமையொன்று தத்தளித்துள்ளது. இதனை அவதானித்த கடற்படையினர் உடனே செயற்பட்டு எருமையை மீட்கச் சென்றனர்.
தமது படகில் எருமையை ஏற்ற முடியாத நிலையில் எருமையை பிடித்துக் கொண்டு கடல் நீருக்குள் பத்திரமாக மீட்டு வந்தனர்.
கடல் நீர் வழியே மீட்டுச் செல்லும் போது அதிகாரியொருவர் எருமையை தனது கைகளால் தடவி அரவணைத்துள்ளார்.
பாதுகாப்பாக அரவணைத்து எருமையை மீட்டுச் செல்லும் கடற்படையினரின் மனிதாபிமான செயல் நெகிழவைத்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த எருமை ; அரவணைத்து மீட்டு செல்லும் கடற்படையினர் வெள்ளத்தில் சிக்கிய எருமையை கடல் வழியே கடற்படையினர் மீட்டுச் செல்லும் காட்சி நெகிழவைத்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தப் பாதிப்புக்களின் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி எருமையொன்று தத்தளித்துள்ளது. இதனை அவதானித்த கடற்படையினர் உடனே செயற்பட்டு எருமையை மீட்கச் சென்றனர். தமது படகில் எருமையை ஏற்ற முடியாத நிலையில் எருமையை பிடித்துக் கொண்டு கடல் நீருக்குள் பத்திரமாக மீட்டு வந்தனர். கடல் நீர் வழியே மீட்டுச் செல்லும் போது அதிகாரியொருவர் எருமையை தனது கைகளால் தடவி அரவணைத்துள்ளார். பாதுகாப்பாக அரவணைத்து எருமையை மீட்டுச் செல்லும் கடற்படையினரின் மனிதாபிமான செயல் நெகிழவைத்துள்ளது.