• Jul 28 2025

வெள்ளத்தால் மூடப்பட்ட பாலம் சாதூர்யமாக தப்பியோடிய நபர்; மோட்டார் சைக்கிளை விட்டு ஓடும் காட்சி இணையத்தில் வைரல்!

shanuja / Jul 28th 2025, 9:54 am
image

வெள்ளத்தால் பாலம் மூடப்பட்டதையடுத்து பாலம் வழியாகப் பயணித்த நபரொருவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது. 


கேரளாவின் இடுக்கி, அடிமாலி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கேரள மக்களின் நிலை பதற்றத்துடன் காணப்படுகின்றது. 

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முல்லைப் பெரியாற்றின் தரைப்பாலம் முழுவதுமாக வெள்ளத்தால் மூடியுள்ளது. 


அவ்வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் பாலத்தைக் கடக்க முயன்றுள்ளார். எனினும்  பாலத்தின் மேலெழுந்த வாரியாக வெள்ளம் அலைமோதியது.


இந்த நிலையில் அவரால் மோட்டார் சைக்கிளில் பாலத்தைக் கடக்க முடியவில்லை. வெள்ளத்தின் அலை அதிகரித்ததால் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மோட்டார் சைக்கிளை பாலத்தில் விட்டு விட்டு அந்த நபர் ஓடிச் சென்றுள்ளார். 


பாலத்தில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தன்னுயிரைக் காப்பாற்றுவதற்காக புத்திசாலித்தனமாக அவர் தப்பி ஓடிய காட்சி காணொளியாக வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வெள்ளத்தால் மூடப்பட்ட பாலம் சாதூர்யமாக தப்பியோடிய நபர்; மோட்டார் சைக்கிளை விட்டு ஓடும் காட்சி இணையத்தில் வைரல் வெள்ளத்தால் பாலம் மூடப்பட்டதையடுத்து பாலம் வழியாகப் பயணித்த நபரொருவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது. கேரளாவின் இடுக்கி, அடிமாலி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கேரள மக்களின் நிலை பதற்றத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முல்லைப் பெரியாற்றின் தரைப்பாலம் முழுவதுமாக வெள்ளத்தால் மூடியுள்ளது. அவ்வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் பாலத்தைக் கடக்க முயன்றுள்ளார். எனினும்  பாலத்தின் மேலெழுந்த வாரியாக வெள்ளம் அலைமோதியது.இந்த நிலையில் அவரால் மோட்டார் சைக்கிளில் பாலத்தைக் கடக்க முடியவில்லை. வெள்ளத்தின் அலை அதிகரித்ததால் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மோட்டார் சைக்கிளை பாலத்தில் விட்டு விட்டு அந்த நபர் ஓடிச் சென்றுள்ளார். பாலத்தில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தன்னுயிரைக் காப்பாற்றுவதற்காக புத்திசாலித்தனமாக அவர் தப்பி ஓடிய காட்சி காணொளியாக வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement