• Oct 05 2026

வவுனியா பல்கலைக்கழகத்தில் “பாரத் கார்னர்” திறந்து வைப்பு

dorin / Oct 5th 2026, 12:33 pm
image

வவுனியா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “பாரத் கார்னர்” (Bharat Corner), இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி எஸ். மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா ஆகியோரால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த பாரத் கார்னரில் பல்வேறு மொழிகளில் தொகுக்கப்பட்ட புத்தகங்கள், நூல்கள் மற்றும் கல்வி வளங்கள், இந்தியாவைச் சேர்ந்த திறந்தநிலை இணையவழி வளங்களை அணுகும் வசதி, இசைக்கருவிகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய வசதியான தளபாடங்களுடன் கூடிய கற்றல் சூழல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாணவர்கள் இந்தியாவின் கலை, கலாசாரம், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் அபிவிருத்திப் பயணம் குறித்து அறிந்து கொள்வதற்கான புதிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் SewaPakhwada2026 நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இது பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் பாரம்பரியத்தையும் சமகால சாதனைகளையும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், வவுனியா பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பாரத் கார்னர் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – இலங்கை கல்வி மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் புதிய முயற்சியாக இது அமைந்துள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தில் “பாரத் கார்னர்” திறந்து வைப்பு வவுனியா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “பாரத் கார்னர்” (Bharat Corner), இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி எஸ். மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா ஆகியோரால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது.இந்த பாரத் கார்னரில் பல்வேறு மொழிகளில் தொகுக்கப்பட்ட புத்தகங்கள், நூல்கள் மற்றும் கல்வி வளங்கள், இந்தியாவைச் சேர்ந்த திறந்தநிலை இணையவழி வளங்களை அணுகும் வசதி, இசைக்கருவிகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய வசதியான தளபாடங்களுடன் கூடிய கற்றல் சூழல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் மாணவர்கள் இந்தியாவின் கலை, கலாசாரம், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் அபிவிருத்திப் பயணம் குறித்து அறிந்து கொள்வதற்கான புதிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் SewaPakhwada2026 நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இது பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவின் பாரம்பரியத்தையும் சமகால சாதனைகளையும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், வவுனியா பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பாரத் கார்னர் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா – இலங்கை கல்வி மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் புதிய முயற்சியாக இது அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement