• Aug 30 2025

குழந்தையுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி

Aathira / Aug 30th 2025, 8:19 am
image

பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு பின்பு கைது செய்துள்ளனர்.. 

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட  பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு,

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் 

தடுப்பு காவலில் எடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்தது. 

மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.. 

கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத காரணத்தினால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.





 

குழந்தையுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு பின்பு கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட  பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு,இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் தடுப்பு காவலில் எடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்தது. மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத காரணத்தினால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement