• Jun 08 2025

தொழில்வாய்ப்புக்களில் பங்கெடுக்க தயாராக இருங்கள்..! - வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு..!

shanuja / Jun 7th 2025, 3:14 pm
image

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 


பி.எல்.சி. கம்பஸின் இணைவு விழா வலம்புரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. 


கல்விப்பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது. ஆனால் இன்று பல தெரிவுகள் வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன.


இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. 


ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன்- என்றார்.

தொழில்வாய்ப்புக்களில் பங்கெடுக்க தயாராக இருங்கள். - வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு. எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பி.எல்.சி. கம்பஸின் இணைவு விழா வலம்புரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. கல்விப்பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது. ஆனால் இன்று பல தெரிவுகள் வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன.இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன்- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement