• Apr 14 2026

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்: கடல் சூழலுக்கு பாதிப்பு

Chithra / Mar 5th 2026, 8:51 am
image


குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


குவைத்தின் முபாரக் அல் கபீர் பகுதியிலிருந்து தென்கிழக்காக 30 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்த எண்ணெய் கசிவு காரணமாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், வெடிப்புச் சம்பவத்துடன் எவ்வித தீ விபத்துக்களும் பதிவாகவில்லை எனவும் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு  குறிப்பிட்டுள்ளது.


எவ்வாறாயினும், குறித்த கப்பலின் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்திலிருந்து சிறிய படகு ஒன்று வேகமாகத் தப்பிச் சென்றதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த சில நாட்களில் வளைகுடா கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.


இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.


இப்பகுதி வழியாகப் பயணம் செய்யும் ஏனைய கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்: கடல் சூழலுக்கு பாதிப்பு குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.குவைத்தின் முபாரக் அல் கபீர் பகுதியிலிருந்து தென்கிழக்காக 30 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த எண்ணெய் கசிவு காரணமாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், வெடிப்புச் சம்பவத்துடன் எவ்வித தீ விபத்துக்களும் பதிவாகவில்லை எனவும் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு  குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும், குறித்த கப்பலின் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்திலிருந்து சிறிய படகு ஒன்று வேகமாகத் தப்பிச் சென்றதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த சில நாட்களில் வளைகுடா கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.இப்பகுதி வழியாகப் பயணம் செய்யும் ஏனைய கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement