• Sep 14 2025

வெலிகம பிரதேச சபையின் தவிசாளருக்கு பிடியாணை!

shanuja / Sep 13th 2025, 3:13 pm
image

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு ஒன்று மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) அழைக்கப்பட்டது.


இதன்போது லசந்த விக்ரமசேகர நீதிமன்றில் முன்னிலையாகாமல்  இருந்துள்ளார். இதனால் லசந்த விக்ரமசேகரவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளருக்கு பிடியாணை வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு ஒன்று மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) அழைக்கப்பட்டது.இதன்போது லசந்த விக்ரமசேகர நீதிமன்றில் முன்னிலையாகாமல்  இருந்துள்ளார். இதனால் லசந்த விக்ரமசேகரவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement