அல்லைப்பிட்டியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் உறவுகள் போராட்டம் செய்துள்ளனர்.
அல்லைப்பிட்டியில் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு கதறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் தற்போது சிறுவனின் உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொலிஸாரை கைது செய் - எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன் போராட்டம் அல்லைப்பிட்டியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் உறவுகள் போராட்டம் செய்துள்ளனர். அல்லைப்பிட்டியில் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.இதன்போது பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு கதறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் தற்போது சிறுவனின் உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.https://www.facebook.com/share/v/1HETiH24eE/