நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சில கைதிகள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சிறைச்சாலை சுவரை துளையிட்டு கைதிகள் சிலர் தப்பி செல்ல முயற்சிக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலையில் நிலவும் இடப்பற்றாக்குறை, போதிய சுகாதார வசதிகள் இல்லாமை, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் தமக்கு விரைவில் பிணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியும் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த சில கைதிகள் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதல்; சுவரை உடைத்து தப்ப முயன்ற கைதிகள் நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சில கைதிகள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் சிறைச்சாலை சுவரை துளையிட்டு கைதிகள் சிலர் தப்பி செல்ல முயற்சிக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளது. சிறைச்சாலையில் நிலவும் இடப்பற்றாக்குறை, போதிய சுகாதார வசதிகள் இல்லாமை, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் தமக்கு விரைவில் பிணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியும் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த சில கைதிகள் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.