பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க அரசாங்கம் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் மற்றும் கொஸ்கொடவில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் குறித்தும் விசாரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவனைத் தாக்கிய 6 மாணவர்கள் வகுப்புகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பகிடிவதையை எதிர்த்ததற்காக குறித்த மாணவர் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் தற்போது வெலிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பந்தப்பட்ட மாணவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பகிடிவதைக்கு எதிராக அநுர அரசின் அதிரடி நடவடிக்கை பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க அரசாங்கம் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது.குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் மற்றும் கொஸ்கொடவில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் குறித்தும் விசாரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவனைத் தாக்கிய 6 மாணவர்கள் வகுப்புகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பகிடிவதையை எதிர்த்ததற்காக குறித்த மாணவர் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.குறித்த மாணவன் தற்போது வெலிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பந்தப்பட்ட மாணவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.