• Aug 21 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்காக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

Chithra / Aug 21st 2025, 11:37 am
image


ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அந்த சரத்தை சவாலுக்கு உட்படுத்தியும், உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். விஜேவிக்ரம ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

சட்டமா அதிபர் இந்த மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். 

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 01 முதல் 04 வரையான சரத்துக்கள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். 

மேலும், குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சரத்துக்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகள் நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இறையாண்மை மற்றும் மக்களின் இறையாண்மையை மீறுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா மற்றும் இரண்டு நபர்களால் குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்காக மேலும் மூன்று மனுத்தாக்கல் ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அந்த சரத்தை சவாலுக்கு உட்படுத்தியும், உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். விஜேவிக்ரம ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சட்டமா அதிபர் இந்த மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 01 முதல் 04 வரையான சரத்துக்கள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மேலும், குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சரத்துக்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகள் நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இறையாண்மை மற்றும் மக்களின் இறையாண்மையை மீறுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா மற்றும் இரண்டு நபர்களால் குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement