இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதனை நோக்காகக் கொண்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சமுத்திர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த 13ஆம் திகதி கடற்படைக்கு மீண்டும் அதிகாரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல்சார் அமைப்பு 2023 இல் செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடற்பரப்புகளை ஆபத்து மிகுந்த பகுதிகள் இல்லை என அறிவித்திருந்தது.
எனினும், குறித்த பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்போது தேசியப் பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பு இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடல் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதனை நோக்காகக் கொண்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சமுத்திர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த 13ஆம் திகதி கடற்படைக்கு மீண்டும் அதிகாரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல்சார் அமைப்பு 2023 இல் செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடற்பரப்புகளை ஆபத்து மிகுந்த பகுதிகள் இல்லை என அறிவித்திருந்தது. எனினும், குறித்த பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது தேசியப் பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பு இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.