• May 09 2026

யாழில் நுளம்புக்கு புகை போட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Ziya / Dec 27th 2023, 8:48 pm
image

நுளம்புக்கு புகைப் போட்ட முதியவர் ஒருவர் நேற்றையதினம்(26)  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது.

இந்நிலையில் அவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் நுளம்புக்கு புகை போட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia நுளம்புக்கு புகைப் போட்ட முதியவர் ஒருவர் நேற்றையதினம்(26)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது.இந்நிலையில் அவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் அவர் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement