• Oct 28 2026

இந்திய இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

Ziya / Oct 28th 2026, 2:30 pm
image

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த கலைப்பிரிவு பட்டதாரியான ரவி டம்டா, சுயமாகக் கற்றுக்கொண்டு ‘HAPIDA SKYNeX’ என்ற மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.


பொறியியல் கல்வி பின்னணி இல்லாத இவர், இணையவழிக் கல்வி மற்றும் சொந்தப் பரிசோதனைகள் மூலம் சுமார் 13 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார்.


செங்குத்தாக மேலே எழும்பவும் கீழிறங்கவும் கூடிய இவ்வகை வாகனம், மலைப்பாங்கான கரடுமுரடான பகுதிகளில் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, 40 கிலோமீற்றர் தூரத்தை வழக்கமாக 90 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் பயணத்தை, 10 முதல் 15 நிமிடங்களில் கடப்பதே இதன் முக்கிய நோக்கம்


முழுமையாக மின்கல சக்தியில் இயங்கும் இந்தப் பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாகப் பறக்கவிட்டுப் பரிசோதித்துள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த முயற்சி, சுயமாகத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளைஞர்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளது. 


வடிவமைத்துள்ளார். 13 ஆண்டுகால தொடர் முயற்சி, இணையவழிக் கல்வி மற்றும் சொந்தப் பரிசோதனைகள் மூலம் முழுமையாக பேட்டரி சக்தியில் இயங்கும் இந்த வாகனத்தை வெற்றிகரமாகப் பறக்கவிட்டுப் பரிசோதித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்திய இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த கலைப்பிரிவு பட்டதாரியான ரவி டம்டா, சுயமாகக் கற்றுக்கொண்டு ‘HAPIDA SKYNeX’ என்ற மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.பொறியியல் கல்வி பின்னணி இல்லாத இவர், இணையவழிக் கல்வி மற்றும் சொந்தப் பரிசோதனைகள் மூலம் சுமார் 13 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார்.செங்குத்தாக மேலே எழும்பவும் கீழிறங்கவும் கூடிய இவ்வகை வாகனம், மலைப்பாங்கான கரடுமுரடான பகுதிகளில் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 40 கிலோமீற்றர் தூரத்தை வழக்கமாக 90 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் பயணத்தை, 10 முதல் 15 நிமிடங்களில் கடப்பதே இதன் முக்கிய நோக்கம்முழுமையாக மின்கல சக்தியில் இயங்கும் இந்தப் பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாகப் பறக்கவிட்டுப் பரிசோதித்துள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த முயற்சி, சுயமாகத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளைஞர்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளது. வடிவமைத்துள்ளார். 13 ஆண்டுகால தொடர் முயற்சி, இணையவழிக் கல்வி மற்றும் சொந்தப் பரிசோதனைகள் மூலம் முழுமையாக பேட்டரி சக்தியில் இயங்கும் இந்த வாகனத்தை வெற்றிகரமாகப் பறக்கவிட்டுப் பரிசோதித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement