• Apr 17 2026

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் - விமானி மீட்பு! ட்ரம்ப் அறிவிப்பு

Chithra / Apr 5th 2026, 11:32 am
image

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். 


இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle வகை போர் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது. 


அதேவேளை, "எதிரி நாட்டு விமானியை" பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. 


மீட்கப்பட்ட விமானி காயமடைந்துள்ள போதிலும் அவர் குணமடைந்து விடுவார் என்றும், ஈரானின் கரடுமுரடான மலைப்பாங்கான பகுதியில் அவர் இருந்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 


இந்த மீட்புப் பணியில் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், அமெரிக்க இராணுவம் 24 மணிநேரமும் அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான இந்த மோதலுக்குப் பிறகு, ஈரான் மண்ணில் விழுந்த முதல் அமெரிக்க விமானம் இதுவாகும். எனினும், ஏற்கனவே மேலும் இரண்டு அமெரிக்க விமானங்களை தாம் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் - விமானி மீட்பு ட்ரம்ப் அறிவிப்பு ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle வகை போர் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது. அதேவேளை, "எதிரி நாட்டு விமானியை" பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. மீட்கப்பட்ட விமானி காயமடைந்துள்ள போதிலும் அவர் குணமடைந்து விடுவார் என்றும், ஈரானின் கரடுமுரடான மலைப்பாங்கான பகுதியில் அவர் இருந்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த மீட்புப் பணியில் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், அமெரிக்க இராணுவம் 24 மணிநேரமும் அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான இந்த மோதலுக்குப் பிறகு, ஈரான் மண்ணில் விழுந்த முதல் அமெரிக்க விமானம் இதுவாகும். எனினும், ஏற்கனவே மேலும் இரண்டு அமெரிக்க விமானங்களை தாம் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement