• Mar 26 2026

எரிபொருள் உயர்வால் விமான சேவைகள் பாதிப்பு!

shanu / Mar 25th 2026, 12:21 pm
image

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை இரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 


பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. 


“மத்திய கிழக்கு மோதல் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எமது கால அட்டவணையில் சில தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளோம். 


இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதோடு, வாடிக்கையாளர்களின் புரிதலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என செய்தித் தொடர்பாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் உயர்வால் விமான சேவைகள் பாதிப்பு மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை இரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. “மத்திய கிழக்கு மோதல் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எமது கால அட்டவணையில் சில தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளோம். இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதோடு, வாடிக்கையாளர்களின் புரிதலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என செய்தித் தொடர்பாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement