• Apr 18 2026

முடங்கிய விமானச் சேவை;வணிக நடவடிக்கைகள் பாதிப்பு !

Ziya / Mar 7th 2026, 11:09 am
image

ஈரான் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதால் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன


குறிப்பாக எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பங்ளாதேஷ் ஆடைத்துறையின் சில்லறை விற்பனையாளர்களின் வணிக நடவடிக்கைகள் நிலைகுலைந்து போயுள்ளன.


 ஆடை ஏற்றுமதிகள் விற்பனைக்கு செல்ல முடியாமல் விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உலகின் முக்கிய ஆடை உற்பத்தி மையமாக திகழ்கிறது தெற்காசியா. 


அனைத்துலக அளவில் உடைகள், டி-சட்டைகள், ஜீன்ஸ் உள்ளிட்ட பலவகையான ஆடைகளின் விற்பனை விநியோகம் சந்தையில் தடையின்றி நடைபெற, நாடுகள் பலவும் பங்ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை நம்பியுள்ளன.


ஆனால், விற்பனைக்காக அனுப்பப்பட்ட ஆடைகள் தற்போது டாக்கா விமான நிலையத்தில் தேங்கி நிற்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.


ஸ்பாரோ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஷோவோன் இஸ்லாம் தெரிவிக்ழகயில்,


என் கடையின் ஐரோப்பிய வாடிக்கையாளர்களில் முன்னணி நிறுவனங்கள் உள்ளன.


இந்தச் சரக்குகளை துபாய் வழியாக இங்கிலாந்துக்கு விமானம் மூலம் கொண்டுசெல்ல அயல்நாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.


ஆனால் துபாய் விமான நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டதால் நாங்கள் இப்போது மிகவும் கடினமான நிலையில் இருக்கிறோம்.


மாற்றுவழிகளைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். ஆனால், அவற்றில் எதுவும் எளிமையானவை அல்லது செலவு குறைந்தவை அல்ல என கூறியுள்ளார்.


மத்திய கிழக்கில் பெரும்பாலான வான்வெளி இன்னும் மூடப்பட்டுள்ளது. 


தெற்காசியாவின் பெரும்பகுதி, சரக்குகளை அனுப்ப வளைகுடா விமான நிறுவனங்களையே நம்பியுள்ளது. 


இதற்கிடையே, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் தொடர்ந்து நீடிப்பதால், உற்பத்தி, ஏற்றுமதித் திறன் குறைந்து, விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

முடங்கிய விமானச் சேவை;வணிக நடவடிக்கைகள் பாதிப்பு ஈரான் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதால் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனகுறிப்பாக எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பங்ளாதேஷ் ஆடைத்துறையின் சில்லறை விற்பனையாளர்களின் வணிக நடவடிக்கைகள் நிலைகுலைந்து போயுள்ளன. ஆடை ஏற்றுமதிகள் விற்பனைக்கு செல்ல முடியாமல் விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகின் முக்கிய ஆடை உற்பத்தி மையமாக திகழ்கிறது தெற்காசியா. அனைத்துலக அளவில் உடைகள், டி-சட்டைகள், ஜீன்ஸ் உள்ளிட்ட பலவகையான ஆடைகளின் விற்பனை விநியோகம் சந்தையில் தடையின்றி நடைபெற, நாடுகள் பலவும் பங்ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை நம்பியுள்ளன.ஆனால், விற்பனைக்காக அனுப்பப்பட்ட ஆடைகள் தற்போது டாக்கா விமான நிலையத்தில் தேங்கி நிற்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.ஸ்பாரோ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஷோவோன் இஸ்லாம் தெரிவிக்ழகயில்,என் கடையின் ஐரோப்பிய வாடிக்கையாளர்களில் முன்னணி நிறுவனங்கள் உள்ளன.இந்தச் சரக்குகளை துபாய் வழியாக இங்கிலாந்துக்கு விமானம் மூலம் கொண்டுசெல்ல அயல்நாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.ஆனால் துபாய் விமான நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டதால் நாங்கள் இப்போது மிகவும் கடினமான நிலையில் இருக்கிறோம்.மாற்றுவழிகளைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். ஆனால், அவற்றில் எதுவும் எளிமையானவை அல்லது செலவு குறைந்தவை அல்ல என கூறியுள்ளார்.மத்திய கிழக்கில் பெரும்பாலான வான்வெளி இன்னும் மூடப்பட்டுள்ளது. தெற்காசியாவின் பெரும்பகுதி, சரக்குகளை அனுப்ப வளைகுடா விமான நிறுவனங்களையே நம்பியுள்ளது. இதற்கிடையே, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் தொடர்ந்து நீடிப்பதால், உற்பத்தி, ஏற்றுமதித் திறன் குறைந்து, விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement