• Jan 14 2025

நாட்டில் ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரிக்கும் காற்றின் தரம்!

Chithra / Dec 9th 2024, 11:33 am
image

 

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் இன்றைய தினம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளதாக  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது. 

தற்போதைய காலநிலை மற்றும் வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் தன்மை என்பவற்றின் காரணமாக நாடுமுழுவதும் காற்றின் தரச்சுட்டெண் 90 முதல் 180 வரையான மட்டத்தில் இன்றைய தினம் காணப்படக்கூடும். 

யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை நகரங்களில் காற்றின் தர சுட்டெண் ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளதுடன், 

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதேநேரம், நுவரெலியா, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் மாத்திரம் இன்றைய தினம் காற்று தரச்சுட்டெண் மத்திம மட்டத்தில் நிலவும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.


நாட்டில் ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரிக்கும் காற்றின் தரம்  நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் இன்றைய தினம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளதாக  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது. தற்போதைய காலநிலை மற்றும் வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் தன்மை என்பவற்றின் காரணமாக நாடுமுழுவதும் காற்றின் தரச்சுட்டெண் 90 முதல் 180 வரையான மட்டத்தில் இன்றைய தினம் காணப்படக்கூடும். யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை நகரங்களில் காற்றின் தர சுட்டெண் ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், நுவரெலியா, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் மாத்திரம் இன்றைய தினம் காற்று தரச்சுட்டெண் மத்திம மட்டத்தில் நிலவும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement