• Jun 22 2026

AI அறுவைசிகிச்சை வெற்றி; இரட்டைச் சகோதரிகளின் புதிய வாழ்க்கை தொடக்கம்

Chithra / Jun 22nd 2026, 11:55 am
image


தலைப்பகுதியில் ஒன்றிணைந்த நிலையில் (Craniopagus) பிறந்து தங்கள் வாழ்க்கையின் முதல் 19 மாதங்களை அப்படியே கழித்த இரட்டைச் சகோதரிகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது ‘மெர்சி’ (Mercy) மற்றும் ‘குட்னஸ்’ (Goodness) என பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறுமிகள் எவ்வித முக்கிய உடல் பாதிப்புமின்றி நலமுடன் இருந்து, தங்கள் மூன்றாவது வயதில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடருகின்றனர்.


இவர்கள் 2023 ஜூன் மாதத்தில் நைஜீரியாவின் எகிட்டி (Ekiti) பகுதியில் பிறந்தனர். பிறக்கும் போதே இவர்களின் மண்டையோடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்ததுடன், மூளைத் திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களும் பகிர்ந்து கொண்டிருந்ததாக 'ஜெமினி அன்ட்வைன்ட்' ‘Gemini Untwined’ தெரிவித்துள்ளது.


மண்டையோடு ஒன்றாக இணைந்த இரட்டையர்களின் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த அமைப்பு, உலகளவில் இவ்வகை சிக்கலான அறுவைசிகிச்சைகளுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.


சிகிச்சை ஆரம்ப கட்டத்தில், இரட்டையர்கள் மேலதிக சிகிச்சைக்காக லண்டனில் உள்ள 'கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்' (Great Ormond Street Hospital) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு குழந்தை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரும் 'ஜெமினி அன்ட்வைன்ட்'  அமைப்பின் நிறுவனருமான நூர் உல் ஓவாஸ் ஜிலானி (Professor Noor ul Owase Jeelani) தலைமையிலான மருத்துவக் குழு சிக்கலான பிரிப்பு அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டது.


மருத்துவத் திட்டமிடல் மற்றும் மூளை இணைப்புகளை பாதுகாப்பாக பிரிப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல மாதங்கள் நீடித்த தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு மாதிரிப்புகளுக்குப் பிறகு இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.


இந்த வெற்றியானது, உலகளாவிய நரம்பியல் அறுவைசிகிச்சை துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது

AI அறுவைசிகிச்சை வெற்றி; இரட்டைச் சகோதரிகளின் புதிய வாழ்க்கை தொடக்கம் தலைப்பகுதியில் ஒன்றிணைந்த நிலையில் (Craniopagus) பிறந்து தங்கள் வாழ்க்கையின் முதல் 19 மாதங்களை அப்படியே கழித்த இரட்டைச் சகோதரிகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.தற்போது ‘மெர்சி’ (Mercy) மற்றும் ‘குட்னஸ்’ (Goodness) என பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறுமிகள் எவ்வித முக்கிய உடல் பாதிப்புமின்றி நலமுடன் இருந்து, தங்கள் மூன்றாவது வயதில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடருகின்றனர்.இவர்கள் 2023 ஜூன் மாதத்தில் நைஜீரியாவின் எகிட்டி (Ekiti) பகுதியில் பிறந்தனர். பிறக்கும் போதே இவர்களின் மண்டையோடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்ததுடன், மூளைத் திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களும் பகிர்ந்து கொண்டிருந்ததாக 'ஜெமினி அன்ட்வைன்ட்' ‘Gemini Untwined’ தெரிவித்துள்ளது.மண்டையோடு ஒன்றாக இணைந்த இரட்டையர்களின் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த அமைப்பு, உலகளவில் இவ்வகை சிக்கலான அறுவைசிகிச்சைகளுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.சிகிச்சை ஆரம்ப கட்டத்தில், இரட்டையர்கள் மேலதிக சிகிச்சைக்காக லண்டனில் உள்ள 'கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்' (Great Ormond Street Hospital) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு குழந்தை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரும் 'ஜெமினி அன்ட்வைன்ட்'  அமைப்பின் நிறுவனருமான நூர் உல் ஓவாஸ் ஜிலானி (Professor Noor ul Owase Jeelani) தலைமையிலான மருத்துவக் குழு சிக்கலான பிரிப்பு அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டது.மருத்துவத் திட்டமிடல் மற்றும் மூளை இணைப்புகளை பாதுகாப்பாக பிரிப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல மாதங்கள் நீடித்த தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு மாதிரிப்புகளுக்குப் பிறகு இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.இந்த வெற்றியானது, உலகளாவிய நரம்பியல் அறுவைசிகிச்சை துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement