• Jul 05 2025

அகமதாபாத் விமான விபத்து - கட்டடத்தில் இருந்து அகற்றப்பட்ட விமானத்தின் பின்புறப்பகுதி...!

shanuja / Jun 16th 2025, 5:12 pm
image

உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் சிக்கியிருந்த விமானத்தின் பின்புறப்பகுதி  பாரம்தூக்கியால் 

அகற்றப்பட்டுள்ளது. 

 

குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த  வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. 


விமானத்தில்  242 பயணிகள் பயணித்த நிலையில்  ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் மருத்துவக் கல்லூரியின் சுவர்களில் சிக்கிக் கொண்டிருந்த காட்சிகள் தான் விபத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நாளிலிருந்து  அதிகளவில் கவனம் பெற்ற காட்சிகளாக  பதிவாகியுள்ளது. 


விமானத்தின் பாகங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அந்த இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


அதற்கமைய மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் சிதறிக்கிடந்த விமானத்தினுடைய றெக்கைகள், விமானத்தின் பாகங்கள், உடைந்த பாகங்கள் தான் தொடர்ச்சியாக அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன.  


இந்த நிலையில் அந்த மருத்துவக் கல்லூரியின்  மேற்பகுதி  கட்டடத்தில் சிக்கிக்கொண்டிருந்த விமானத்தின் பின்புறப்பகுதிகள் இன்று ஒரு இராட்சச பாரம்தூக்கி

 மூலம்  அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அகமதாபாத் விமான விபத்து - கட்டடத்தில் இருந்து அகற்றப்பட்ட விமானத்தின் பின்புறப்பகுதி. உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் சிக்கியிருந்த விமானத்தின் பின்புறப்பகுதி  பாரம்தூக்கியால் அகற்றப்பட்டுள்ளது.  குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த  வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. விமானத்தில்  242 பயணிகள் பயணித்த நிலையில்  ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் மருத்துவக் கல்லூரியின் சுவர்களில் சிக்கிக் கொண்டிருந்த காட்சிகள் தான் விபத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நாளிலிருந்து  அதிகளவில் கவனம் பெற்ற காட்சிகளாக  பதிவாகியுள்ளது. விமானத்தின் பாகங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அந்த இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கமைய மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் சிதறிக்கிடந்த விமானத்தினுடைய றெக்கைகள், விமானத்தின் பாகங்கள், உடைந்த பாகங்கள் தான் தொடர்ச்சியாக அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன.  இந்த நிலையில் அந்த மருத்துவக் கல்லூரியின்  மேற்பகுதி  கட்டடத்தில் சிக்கிக்கொண்டிருந்த விமானத்தின் பின்புறப்பகுதிகள் இன்று ஒரு இராட்சச பாரம்தூக்கி மூலம்  அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now