2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர்.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் திங்கட்கிழமை(17.08.2026) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் கிராம வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 30.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் பிரதம பொறியியலாளர் தி.சுரேந்திரகுமார் தலைமையில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு அபிவிருத்திப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து விட்டு உரையாற்றுகiயிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…..
எமது அரசாங்கத்திற்கு பழி சுமத்துகின்ற அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதை காணமுடிகிறது. ஆனாலும் அவர்களது இந்த குழப்புகின்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிபதிகளின் வயதில்லைகளை அதிகரிப்பது தொடர்பான விடயங்களை வைத்துக்கொண்டு அதனையும் அரசுக்கு எதிரான பிரசாரங்களாக எடுத்துக் கொண்டு சிலர் வருகின்றார்கள்.
இந்த காலங்களிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் நீதிமன்றத்தில் ஊடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதேபோன்று பாதாள உலக செயற்பாடுகளிலும், போதை விற்பனையில் ஈடுபட்டவர்களும், அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் சுயாதீனமாக நீதித்துறை கட்டமைப்புகளின் ஊடாக விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதனை ஓர் அரசியலாக உருவாக்கிக் கொண்டு அதற்கு எதிராக ஒரு சில கூட்டணிகளை அமைத்துக் கொண்டும் சிலர் எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள்கூட நீதிபதிகளின் வயதிலேயே 70 வயதுகளாக நிர்ணயித்தால்கூட சிறப்பாக இருக்கும் என அண்மையில் தெரிவித்து இருக்கின்றார் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அ.லிங்கேஸ்வரன், திட்டப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றிஸ்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நீதிபதிகளின் வயதெல்லை விவகாரத்தில் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள்.என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர்.மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் திங்கட்கிழமை(17.08.2026) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் கிராம வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 30.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் பிரதம பொறியியலாளர் தி.சுரேந்திரகுமார் தலைமையில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு அபிவிருத்திப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து விட்டு உரையாற்றுகiயிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்….எமது அரசாங்கத்திற்கு பழி சுமத்துகின்ற அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதை காணமுடிகிறது. ஆனாலும் அவர்களது இந்த குழப்புகின்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிபதிகளின் வயதில்லைகளை அதிகரிப்பது தொடர்பான விடயங்களை வைத்துக்கொண்டு அதனையும் அரசுக்கு எதிரான பிரசாரங்களாக எடுத்துக் கொண்டு சிலர் வருகின்றார்கள்.இந்த காலங்களிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.அது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் நீதிமன்றத்தில் ஊடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.அதேபோன்று பாதாள உலக செயற்பாடுகளிலும், போதை விற்பனையில் ஈடுபட்டவர்களும், அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சுயாதீனமாக நீதித்துறை கட்டமைப்புகளின் ஊடாக விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதனை ஓர் அரசியலாக உருவாக்கிக் கொண்டு அதற்கு எதிராக ஒரு சில கூட்டணிகளை அமைத்துக் கொண்டும் சிலர் எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள்.வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள்கூட நீதிபதிகளின் வயதிலேயே 70 வயதுகளாக நிர்ணயித்தால்கூட சிறப்பாக இருக்கும் என அண்மையில் தெரிவித்து இருக்கின்றார் என அவர் இதன்போது தெரிவித்தார்.இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அ.லிங்கேஸ்வரன், திட்டப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றிஸ்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.