• Mar 10 2026

பண்டாரகம பகுதியில் விபத்து - பெண்ணொருவர் உயிரிழப்பு!

shanu / Mar 10th 2026, 10:46 am
image

பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில் வீதியின் எதிர்ப்பக்கமாகச் செல்ல முயன்றபோது குறித்த பெண் மீது மோதியுள்ளது.


குறித்த லொறியானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் உள்ள டயர் கடையின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை முச்சக்கர வண்டியில் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


லொறியின் சாரதி தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


இவ் விபத்தால் லொறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், தொலைபேசி கம்பம் மற்றும் அருகிலிருந்த கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பண்டாரகம பகுதியில் விபத்து - பெண்ணொருவர் உயிரிழப்பு பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில் வீதியின் எதிர்ப்பக்கமாகச் செல்ல முயன்றபோது குறித்த பெண் மீது மோதியுள்ளது.குறித்த லொறியானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் உள்ள டயர் கடையின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை முச்சக்கர வண்டியில் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.லொறியின் சாரதி தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இவ் விபத்தால் லொறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், தொலைபேசி கம்பம் மற்றும் அருகிலிருந்த கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement