• May 23 2026

வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி வடிகானினுள் விழுந்த வேன்; திருமலையில் விபத்து

Chithra / Nov 4th 2025, 7:17 pm
image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் வேனும் - முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் வீதியால் சென்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

உட்துறைமுக வீதியின் வழியே நகர்ப்பகுதியை நோக்கி பயணித்த அரச திணைக்கள வாகனம் திடீரென வெலிங்டன் அடை வீதிக்கு திரும்ப முயற்சிக்கையில் முச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வேன் அப்பகுதியால் நடந்து சென்ற பெண்ணின்  மீது மோதி  அருகில் உள்ள வடிகானினுள் விழுந்துள்ளது. 

காயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி வடிகானினுள் விழுந்த வேன்; திருமலையில் விபத்து திருகோணமலை உட்துறைமுக வீதியில் வேனும் - முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் வீதியால் சென்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.உட்துறைமுக வீதியின் வழியே நகர்ப்பகுதியை நோக்கி பயணித்த அரச திணைக்கள வாகனம் திடீரென வெலிங்டன் அடை வீதிக்கு திரும்ப முயற்சிக்கையில் முச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது குறித்த வேன் அப்பகுதியால் நடந்து சென்ற பெண்ணின்  மீது மோதி  அருகில் உள்ள வடிகானினுள் விழுந்துள்ளது. காயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement