• Sep 15 2026

சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்! இலங்கை - தாய்லாந்து இடையே ஒப்பந்தம்

Chithra / Sep 15th 2026, 9:54 am
image


இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையே இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


இந்த ஒப்பந்தங்களின்படி,முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.


தாய்லாந்துத் தலைநகர் பேங்கொக்கில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழில்அமைச்சர் ஜூலபன் அமோர்ன்விவாட் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.


இந்த ஒப்பந்தங்களின்படி, வேலைவாய்ப்பு , சட்டப்பூர்வ பாதுகாப்பு, நலன்புரி உதவிகள், விசா மற்றும் வேலைக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான கடுமையான செயற்பாடுகள் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.


இந்தக் கட்டமைப்பின் கீழ் பணிக்கு அமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, தாய்லாந்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வேதனம் மற்றும் சலுகைகள் உட்பட முழுமையான உரிமைகளும் பாதுகாப்பும் சமமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள் இலங்கை - தாய்லாந்து இடையே ஒப்பந்தம் இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையே இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.இந்த ஒப்பந்தங்களின்படி,முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.தாய்லாந்துத் தலைநகர் பேங்கொக்கில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழில்அமைச்சர் ஜூலபன் அமோர்ன்விவாட் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தங்களின்படி, வேலைவாய்ப்பு , சட்டப்பூர்வ பாதுகாப்பு, நலன்புரி உதவிகள், விசா மற்றும் வேலைக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான கடுமையான செயற்பாடுகள் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்தக் கட்டமைப்பின் கீழ் பணிக்கு அமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, தாய்லாந்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வேதனம் மற்றும் சலுகைகள் உட்பட முழுமையான உரிமைகளும் பாதுகாப்பும் சமமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement