• May 13 2025

இலங்கையை உலுக்கிய கோர விபத்து; மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் நிலை என்ன? விசாரணையில் வெளிவரும் தகவல்கள்!

Chithra / May 13th 2025, 7:36 am
image


கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.

அத்துடன், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

அதனூடாக, சாரதி பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக எந்த அறிகுறிகளும் அவதானிக்கப்படவில்லை என, நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர்   தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்தார்.

இதற்கிடையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை நேற்று பிற்பகல் முதல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இறந்தவர்களில் அடையாளம் காணப்படாத ஒருவரின் உடலும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்கள் 17 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், 

அவர்கள் கொஸ்லந்த, திஸ்ஸமஹாராம, பேராதெனிய,மொனராகலை, லுனுகம்வெஹெர, பன்னில மற்றும் குருநாகல் , எதிலிவெவ , பண்டாரவளை, அம்பகஸ்தோவ, கந்தளாய், சிலாபம், பொல்பித்திகம மற்றும் 

மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

இதனிடையே, காயமடைந்த 43 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை   விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக பேராதனை போதனா மருத்துவமனையின் இயக்குநர் ஏ.எம்.எஸ் வீரபண்டார தெரிவித்தார்.

கம்பளை மருத்துவமனையில் இருந்து ஆறு மாத குழந்தை, ஆறு மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகள் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூவரில் 6 மாதக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

மதியம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மேலும் குழந்தையின் முதுகெலும்பு, சிறுநீர் பாதை மற்றும் மார்பு குழிக்கு அருகில் அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

சிறப்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து; மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் நிலை என்ன விசாரணையில் வெளிவரும் தகவல்கள் கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.அத்துடன், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதனூடாக, சாரதி பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக எந்த அறிகுறிகளும் அவதானிக்கப்படவில்லை என, நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர்   தெரிவித்தார். எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்தார்.இதற்கிடையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை நேற்று பிற்பகல் முதல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களில் அடையாளம் காணப்படாத ஒருவரின் உடலும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 17 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் கொஸ்லந்த, திஸ்ஸமஹாராம, பேராதெனிய,மொனராகலை, லுனுகம்வெஹெர, பன்னில மற்றும் குருநாகல் , எதிலிவெவ , பண்டாரவளை, அம்பகஸ்தோவ, கந்தளாய், சிலாபம், பொல்பித்திகம மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இதனிடையே, காயமடைந்த 43 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை   விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக பேராதனை போதனா மருத்துவமனையின் இயக்குநர் ஏ.எம்.எஸ் வீரபண்டார தெரிவித்தார்.கம்பளை மருத்துவமனையில் இருந்து ஆறு மாத குழந்தை, ஆறு மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகள் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மூவரில் 6 மாதக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.மதியம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மேலும் குழந்தையின் முதுகெலும்பு, சிறுநீர் பாதை மற்றும் மார்பு குழிக்கு அருகில் அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.சிறப்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement