• May 15 2026

தேயிலை கொழுந்து பறித்த வேளையில் நடந்த விபரீதம் - ஐவர் வைத்தியசாலையில்!

shanu / May 14th 2026, 3:21 pm
image

தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்தச் சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் தோட்டத்தின் மேற்பகுதியில் இன்று (14) இடம்பெற்றுள்ளது. 


தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியது. 


இதன்போது காயமடைந்த 5 பெண்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது பருந்தொன்று தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து கலைந்த குளவிகள்  தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காயமடைந்த பெண்கள்  பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தேயிலை கொழுந்து பறித்த வேளையில் நடந்த விபரீதம் - ஐவர் வைத்தியசாலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் தோட்டத்தின் மேற்பகுதியில் இன்று (14) இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியது. இதன்போது காயமடைந்த 5 பெண்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது பருந்தொன்று தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து கலைந்த குளவிகள்  தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள்  பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement