முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, தண்ணிமுறிப்பு கிராம மக்களின் அவலங்கள் நிறைந்த அகதிவாழ்க்கை முற்றுப்பெறவேண்டுமென தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உடனடியாகத் தண்ணிமுறிப்புக் கிராமத்தில், அக்கிராமத்திற்குரிய தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்ணிமுறிப்புப் பகுதி மக்களின் அழைப்பினை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று தண்ணிமுறிப்புப் பகுதிக்குச்சென்று, பூர்வீக தண்ணிமுறிப்புக் கிராமத்தினைப் பார்வையிட்டதுடன், தண்ணிமுறிப்புக் கிராம மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமமான தண்ணிமுறிப்பு இதுவரையில் மீள்குடியமர்த்தப்படவில்லை.
அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக தண்ணிமுறிப்புக் கிராமத்தில் பன்னெடுங்காலமாக மிகப்பாரிய நீர்பாசனக் குளமான தண்ணிமுறிப்புக் குளம் காணப்படுகின்றது. இத் தண்ணிமுறிப்புக் குளத்தோடு சேர்ந்திருந்த கிராமமே தண்ணிமுறிப்புக் கிராமமாகும்.
இக்கிராமத்தில் பாடசாலை, முன்பள்ளி, உபதபாலகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளும் காணப்பட்டுள்ளன.
இந்தப் பகுதி மிகஅதிகமான நெற்பயிற்செய்கை செய்யப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயலும் வயல் சார்ந்த இடமாகக் காணப்படுவதால் நெற்களஞ்சியசாலையும் இங்கு இருந்துள்ளது. இவ்வாறாக தன்னிறைவுடன், செழிப்பான கிராமமாக தண்ணிமுறிப்புக் கிராமம் இருந்துள்ளது.
இங்கிருந்து இடம்பெபயரும்போது இப்பகுதியில் 56குடும்பங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
தற்போது 150குடும்பங்களுக்குமேல், குடும்பங்கள் பெருகி, ஆங்காங்கே அகதிகளாக குடியிருக்கும் அவலநிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்பகுதி மக்கள் தங்களை தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தி, தங்களுக்குரிய வசதிவாய்ப்புக்களைச் செய்துதருமாறு தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தண்ணிமுறிப்பு கிராமப் பகுதிகளில் தற்போது வனவளத் திணைக்களம் மற்றும், தொல்லியல் திணைக்களம் என்பன எல்லைக்கல்லிட்டு அபகரிப்புச்செய்கின்ற நிலமைகளே இங்கு காணப்படுகின்றன.
இவ்வாறான இனவாத அரசுகளின் அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் தண்ணிமுறிப்புக் கிராமமக்கள் இதுவரையில் மீள்குடியமர்த்தப்படவில்லை.
தற்போதும் அங்கு எமது மக்கள் வாழ்ந்தமைக்குரிய கட்டடச்சிதைவுகள், பயன்தருமரங்கள், வேலிகள் என்பன அடையாளங்களாகக் காணப்படுகின்றன.
இவ்வாறிருக்கும்போது எமது மக்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்புக்கிராமத்தில், அந்த மக்களை மீள்குடியமர்த்தாமைக்கான காரணமென்ன. இந்த நிலத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வேறு குடியேற்றங்கள் எதனையாவது இங்கு மேற்கொள்ளப்போகின்றனரா என இந்த மக்கள் எம்மிடம் கேட்கின்றனர்.
எமது மகமகளுடைய இந்தப் பூர்வீக வாழ்விடத்தில் மீள்குடியமர்த்துவதுடன், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
இதுதொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குகொண்டுவந்து, இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு உரிய தரப்பினருக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பேன். தொடர்ந்தும் இந்த மக்கள் அகதிகளாக அவலங்களோடு வாழ்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இந்த மக்கள் மீண்டும் குடியேறியநிலையில், 1991ஆம் ஆண்டு மீண்டும் இடப்பெயர்வைச் சந்தித்தனர்.
இந்நிலையிலேயே இப்பகுதிமக்களை இதுவரையில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்தமகமகளை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்றார்.
தண்ணிமுறிப்பு மக்களின் அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி தேவை - ரவிகரன் எம்.பி கோரிக்கை முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, தண்ணிமுறிப்பு கிராம மக்களின் அவலங்கள் நிறைந்த அகதிவாழ்க்கை முற்றுப்பெறவேண்டுமென தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உடனடியாகத் தண்ணிமுறிப்புக் கிராமத்தில், அக்கிராமத்திற்குரிய தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணிமுறிப்புப் பகுதி மக்களின் அழைப்பினை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று தண்ணிமுறிப்புப் பகுதிக்குச்சென்று, பூர்வீக தண்ணிமுறிப்புக் கிராமத்தினைப் பார்வையிட்டதுடன், தண்ணிமுறிப்புக் கிராம மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமமான தண்ணிமுறிப்பு இதுவரையில் மீள்குடியமர்த்தப்படவில்லை. அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக தண்ணிமுறிப்புக் கிராமத்தில் பன்னெடுங்காலமாக மிகப்பாரிய நீர்பாசனக் குளமான தண்ணிமுறிப்புக் குளம் காணப்படுகின்றது. இத் தண்ணிமுறிப்புக் குளத்தோடு சேர்ந்திருந்த கிராமமே தண்ணிமுறிப்புக் கிராமமாகும். இக்கிராமத்தில் பாடசாலை, முன்பள்ளி, உபதபாலகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளும் காணப்பட்டுள்ளன.இந்தப் பகுதி மிகஅதிகமான நெற்பயிற்செய்கை செய்யப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயலும் வயல் சார்ந்த இடமாகக் காணப்படுவதால் நெற்களஞ்சியசாலையும் இங்கு இருந்துள்ளது. இவ்வாறாக தன்னிறைவுடன், செழிப்பான கிராமமாக தண்ணிமுறிப்புக் கிராமம் இருந்துள்ளது. இங்கிருந்து இடம்பெபயரும்போது இப்பகுதியில் 56குடும்பங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. தற்போது 150குடும்பங்களுக்குமேல், குடும்பங்கள் பெருகி, ஆங்காங்கே அகதிகளாக குடியிருக்கும் அவலநிலையை எதிர்நோக்கியுள்ளனர். இப்பகுதி மக்கள் தங்களை தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தி, தங்களுக்குரிய வசதிவாய்ப்புக்களைச் செய்துதருமாறு தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சூழலில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தண்ணிமுறிப்பு கிராமப் பகுதிகளில் தற்போது வனவளத் திணைக்களம் மற்றும், தொல்லியல் திணைக்களம் என்பன எல்லைக்கல்லிட்டு அபகரிப்புச்செய்கின்ற நிலமைகளே இங்கு காணப்படுகின்றன.இவ்வாறான இனவாத அரசுகளின் அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் தண்ணிமுறிப்புக் கிராமமக்கள் இதுவரையில் மீள்குடியமர்த்தப்படவில்லை. தற்போதும் அங்கு எமது மக்கள் வாழ்ந்தமைக்குரிய கட்டடச்சிதைவுகள், பயன்தருமரங்கள், வேலிகள் என்பன அடையாளங்களாகக் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கும்போது எமது மக்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்புக்கிராமத்தில், அந்த மக்களை மீள்குடியமர்த்தாமைக்கான காரணமென்ன. இந்த நிலத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வேறு குடியேற்றங்கள் எதனையாவது இங்கு மேற்கொள்ளப்போகின்றனரா என இந்த மக்கள் எம்மிடம் கேட்கின்றனர்.எமது மகமகளுடைய இந்தப் பூர்வீக வாழ்விடத்தில் மீள்குடியமர்த்துவதுடன், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இதுதொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குகொண்டுவந்து, இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு உரிய தரப்பினருக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பேன். தொடர்ந்தும் இந்த மக்கள் அகதிகளாக அவலங்களோடு வாழ்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இந்த மக்கள் மீண்டும் குடியேறியநிலையில், 1991ஆம் ஆண்டு மீண்டும் இடப்பெயர்வைச் சந்தித்தனர். இந்நிலையிலேயே இப்பகுதிமக்களை இதுவரையில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்தமகமகளை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்றார்.