பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய விதுர சஞ்சீவ மதுரட்ட (என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
ஆகையால் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் திடீர் மரணம் பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய விதுர சஞ்சீவ மதுரட்ட (என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த உத்தியோகத்தர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆகையால் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.