காலி - கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நிகழும் அதிர்ச்சி காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விவாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டியும் பேருந்தும் மோதி கோர விபத்து - சிறுமி பரிதாபமாக பலி காலி - கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நிகழும் அதிர்ச்சி காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விவாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.