• Apr 25 2026

மதுபானங்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை!

Chithra / Feb 5th 2026, 6:43 pm
image

 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதால், நுகர்வோர் பெரும் சுமையை எதிர்நோக்குவதாகவும், அவற்றின் விலையைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், 

மதுபான விற்பனை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீரவிடம் கேள்வி எழுப்பினார்.

பொதுவாக 'கல்' என்று அழைக்கப்படும் சாராய போத்தல் ஒன்றுக்கு 1,832 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.

இலங்கையில் ஒரு திருமணம் அல்லது இறுதிச்சடங்கு எதுவாக இருந்தாலும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாராயம் இதுவாகும்.

அதிக விலை காரணமாக மக்கள் தரம் குறைந்த மதுபானங்களை நாடிச் செல்கின்றனர்.இறுதியில் சுகாதார அமைச்சரே இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்,

உள்நாட்டு மதுபானங்களுக்கான விலை மற்றும் வரி விதிப்பு முறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இந்தக் கோரிக்கை குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டில் மதுவரி மூலம் 213.39 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மதுபானங்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதால், நுகர்வோர் பெரும் சுமையை எதிர்நோக்குவதாகவும், அவற்றின் விலையைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன  தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், மதுபான விற்பனை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீரவிடம் கேள்வி எழுப்பினார்.பொதுவாக 'கல்' என்று அழைக்கப்படும் சாராய போத்தல் ஒன்றுக்கு 1,832 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.இலங்கையில் ஒரு திருமணம் அல்லது இறுதிச்சடங்கு எதுவாக இருந்தாலும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாராயம் இதுவாகும்.அதிக விலை காரணமாக மக்கள் தரம் குறைந்த மதுபானங்களை நாடிச் செல்கின்றனர்.இறுதியில் சுகாதார அமைச்சரே இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்,உள்நாட்டு மதுபானங்களுக்கான விலை மற்றும் வரி விதிப்பு முறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இந்தக் கோரிக்கை குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனத் தெரிவித்தார்.மேலும், கடந்த ஆண்டில் மதுவரி மூலம் 213.39 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement