• Apr 17 2026

வீதியில் உயிருக்கு போராடிய செம்பருந்து-வாழ்கை தத்துவத்தினை நினைவூட்டிய சம்பவம்!

Ziya / Jan 29th 2026, 9:15 am
image

ஈழத்து எழுத்தாளர்  ஒருவரின் சுவாரசியமான அனுபவ பதிவு வாழ்க்கை தத்துவத்தை கண் முன் நிறுத்துகின்றது.


A-09 பிரதான வீதியின் நடுப்பகுதியில் ஒரு செம்பருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.


வாகனத்தில் மோதியதால் அதன் இறக்கை உடைந்து பறக்க முடியாத நிலையில் இருந்த அந்த செம்பருந்தை, காகங்கள் சூழ்ந்து கொத்த முயன்றுள்ளது.


“உயிருக்கு போராடும் செம்பருந்து, அதை உணவாக்க முயன்ற காகங்கள், தமது சகாவை காப்பாற்ற சுற்றிவந்த ஏனைய செம்பருந்துகள் இவை அனைத்தும் வாழ்க்கையின் யதார்த்தத்தை  கண்முன்னே நிறுத்துகின்றன.


சாதாரண நாட்களில் செம்பருந்துகள் காகங்களைத் துரத்தி விரட்டும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். 


ஆனால் இன்றோ, இயங்க முடியாத நிலையில் இருந்த செம்பருந்தை தாக்க காகங்கள் துணிந்தன. 


இதே நேரத்தில், குறைந்தது இருபது செம்பருந்துகள் அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டு, காகங்களைத் துரத்தி தமது சகாவை காப்பாற்ற முயன்றன.


“ஆபத்தில் நண்பனை அறியலாம்” என்ற பழமொழி அந்த நொடிகளில் உயிருடன் நடைமுறையில் இருப்பதைப் போல உணரப்பட்டது. 


தமது சகாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மற்ற செம்பருந்துகள் செயல்பட்ட விதம் மனிதர்களுக்கும் ஒரு பாடமாக இருந்தது.


இந்தச் சம்பவம், ஒரு சிறிய பறவையின் போராட்டம் வழியாக மனிதர்களுக்கு மனிதநேயமும், ஒற்றுமையும், சக உயிர்களுக்கான கருணையும் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.


https://www.facebook.com/share/v/1AKQirwjL1/


வீதியில் உயிருக்கு போராடிய செம்பருந்து-வாழ்கை தத்துவத்தினை நினைவூட்டிய சம்பவம் ஈழத்து எழுத்தாளர்  ஒருவரின் சுவாரசியமான அனுபவ பதிவு வாழ்க்கை தத்துவத்தை கண் முன் நிறுத்துகின்றது.A-09 பிரதான வீதியின் நடுப்பகுதியில் ஒரு செம்பருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.வாகனத்தில் மோதியதால் அதன் இறக்கை உடைந்து பறக்க முடியாத நிலையில் இருந்த அந்த செம்பருந்தை, காகங்கள் சூழ்ந்து கொத்த முயன்றுள்ளது.“உயிருக்கு போராடும் செம்பருந்து, அதை உணவாக்க முயன்ற காகங்கள், தமது சகாவை காப்பாற்ற சுற்றிவந்த ஏனைய செம்பருந்துகள் இவை அனைத்தும் வாழ்க்கையின் யதார்த்தத்தை  கண்முன்னே நிறுத்துகின்றன.சாதாரண நாட்களில் செம்பருந்துகள் காகங்களைத் துரத்தி விரட்டும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். ஆனால் இன்றோ, இயங்க முடியாத நிலையில் இருந்த செம்பருந்தை தாக்க காகங்கள் துணிந்தன. இதே நேரத்தில், குறைந்தது இருபது செம்பருந்துகள் அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டு, காகங்களைத் துரத்தி தமது சகாவை காப்பாற்ற முயன்றன.“ஆபத்தில் நண்பனை அறியலாம்” என்ற பழமொழி அந்த நொடிகளில் உயிருடன் நடைமுறையில் இருப்பதைப் போல உணரப்பட்டது. தமது சகாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மற்ற செம்பருந்துகள் செயல்பட்ட விதம் மனிதர்களுக்கும் ஒரு பாடமாக இருந்தது.இந்தச் சம்பவம், ஒரு சிறிய பறவையின் போராட்டம் வழியாக மனிதர்களுக்கு மனிதநேயமும், ஒற்றுமையும், சக உயிர்களுக்கான கருணையும் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.https://www.facebook.com/share/v/1AKQirwjL1/

Advertisement

Advertisement

Advertisement