• May 23 2025

நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

Chithra / May 22nd 2025, 11:22 am
image

யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. 

நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. 


அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement