• Jun 06 2025

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Chithra / Jun 5th 2025, 3:07 pm
image


பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு  7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.    

இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழங்கினார். 

குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரி ஒருவருக்கு அந்த தாய், தனது குழந்தையை விற்க முயன்றுள்ளார்.

இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 360(2)-இன் கீழ் குற்றம் சாட்டி, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும், அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு  7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.    இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழங்கினார். குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரி ஒருவருக்கு அந்த தாய், தனது குழந்தையை விற்க முயன்றுள்ளார்.இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 360(2)-இன் கீழ் குற்றம் சாட்டி, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும், அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement