• May 05 2026

கொஹிலைப் பறிக்கச் சென்றவர் குழிக்குள் விழுந்து உயிரிழப்பு!

shanu / Jan 27th 2026, 12:03 pm
image

மில்லனிய, கிம்மன்துதாவ பகுதியில் கொஹிலைக் குழிக்குள் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


உயிரிழந்தவர் 67 வயதான பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


நேற்று முன்தினம் (25) இரவு குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், நேற்று (26) பகல் அவரது சகோதரர் அப் பகுதியை சோதனையிட்டுள்ளார். 


இதன்போது வீட்டுக்கு அருகிலுள்ள கொஹிலை பாத்திக்கு அருகில் பறிக்கப்பட்ட கொஹிலைக் கட்டு ஒன்று காணப்பட்டுள்ளது. 


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொஹிலைக் குழிக்குள் இருந்து நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


கொஹிலைப் பறிக்கச் சென்றவர் குழிக்குள் விழுந்து உயிரிழப்பு மில்லனிய, கிம்மன்துதாவ பகுதியில் கொஹிலைக் குழிக்குள் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 67 வயதான பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் (25) இரவு குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், நேற்று (26) பகல் அவரது சகோதரர் அப் பகுதியை சோதனையிட்டுள்ளார். இதன்போது வீட்டுக்கு அருகிலுள்ள கொஹிலை பாத்திக்கு அருகில் பறிக்கப்பட்ட கொஹிலைக் கட்டு ஒன்று காணப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொஹிலைக் குழிக்குள் இருந்து நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement