• Apr 20 2026

யாழில் மோட்டார் சைக்கிளை பந்தாடிய சொகுசு பேருந்து...! ஆணொருவர் பரிதாப மரணம்...!

Ziya / Mar 26th 2024, 12:34 pm
image

யாழ். தென்மராட்சி மீசாலைப் பகுதியில் நேற்றிரவு(25) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றையதினம்(25)  இரவு கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து, யாழ் தென்மராட்சி  மீசாலைப் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியை சேர்ந்த  41 வயதுடைய சின்னராசா சுதன்ராஜ் என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் தப்பியோடி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










யாழில் மோட்டார் சைக்கிளை பந்தாடிய சொகுசு பேருந்து. ஆணொருவர் பரிதாப மரணம். யாழ். தென்மராட்சி மீசாலைப் பகுதியில் நேற்றிரவு(25) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றையதினம்(25)  இரவு கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து, யாழ் தென்மராட்சி  மீசாலைப் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகியது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சியை சேர்ந்த  41 வயதுடைய சின்னராசா சுதன்ராஜ் என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் தப்பியோடி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement