• Jul 01 2025

24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

Chithra / Jul 1st 2025, 12:44 pm
image


உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை ஏறி, இறங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பலரும் தங்க நகைகள் வாங்கும் கனவை நனவாக்குவதில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தோரில் வாழும் ஒருவர் வீட்டிலுள்ள சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை 24 கேரட் தங்கத்தைப் பயன்படுத்தி கட்டியுள்ளமை அனைவரையும் வாய் பிளக்கச் செய்துள்ளது. 

கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத்  தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

அதில் வீட்டின் போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. 

அடுத்ததாக வீட்டுக்குள் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறது.

மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 

பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன. வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

ஒரு பக்கம் தங்கள் பசுக்களுக்காக மின்விசிறிகள் உட்பட நல்ல வசதியுடன் ஒரு தொழுவம் அமைத்திருக்கிறார் அந்த கோடீஸ்வரர். 

வீட்டின் உரிமையாளர் கூறும்போது, “எங்கள் குடும்பத்தில் மொத்தம் 25 பேர் உள்ளோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். 

இதன்பிறகு அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டடங்களை கட்டி கொடுத்தோம். தற்போது 300 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஹோட்டலை கட்டி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை ஏறி, இறங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பலரும் தங்க நகைகள் வாங்கும் கனவை நனவாக்குவதில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தோரில் வாழும் ஒருவர் வீட்டிலுள்ள சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை 24 கேரட் தங்கத்தைப் பயன்படுத்தி கட்டியுள்ளமை அனைவரையும் வாய் பிளக்கச் செய்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத்  தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.அதில் வீட்டின் போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. அடுத்ததாக வீட்டுக்குள் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறது.மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன. வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.ஒரு பக்கம் தங்கள் பசுக்களுக்காக மின்விசிறிகள் உட்பட நல்ல வசதியுடன் ஒரு தொழுவம் அமைத்திருக்கிறார் அந்த கோடீஸ்வரர். வீட்டின் உரிமையாளர் கூறும்போது, “எங்கள் குடும்பத்தில் மொத்தம் 25 பேர் உள்ளோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். இதன்பிறகு அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டடங்களை கட்டி கொடுத்தோம். தற்போது 300 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஹோட்டலை கட்டி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement