• May 23 2026

தாயைப் பார்க்கச் சென்ற மகனை தகாத வார்த்தையில் பேசிய காவலாளி ; அனுராதபுரம் வைத்தியசாலையில் விமர்சனத்தை ஏற்படுத்திய சம்பவம்!

shanu / Jan 5th 2026, 2:52 pm
image

வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில்  நேற்று (04) இடம்பெற்றுள்ளது. 


அநுராதபுரம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க அவரது மகன் நேற்று வைத்தியாசாலைக்குச் சென்றுள்ளார். 


அப்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலாளிக்கும் குறித்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


அப்போது குறித்த நபரை காவலாளி  தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அத்துடன் அவரைத் தாக்கவும் முயற்சித்துள்ளார். பின்னர் அங்கிருந்த பெண் காவலாளி குறித்த காவலாளியைத் தடுத்து கூட்டிச் சென்றுள்ளார். 


இந்தச் சம்பவம் தொடர்பிலான காணொளி வெளிவந்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. காணொளியைப் பார்த்த பலர் குறித்த காவலாளி மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/1HNF9YFede/

தாயைப் பார்க்கச் சென்ற மகனை தகாத வார்த்தையில் பேசிய காவலாளி ; அனுராதபுரம் வைத்தியசாலையில் விமர்சனத்தை ஏற்படுத்திய சம்பவம் வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில்  நேற்று (04) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க அவரது மகன் நேற்று வைத்தியாசாலைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலாளிக்கும் குறித்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறித்த நபரை காவலாளி  தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அத்துடன் அவரைத் தாக்கவும் முயற்சித்துள்ளார். பின்னர் அங்கிருந்த பெண் காவலாளி குறித்த காவலாளியைத் தடுத்து கூட்டிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பிலான காணொளி வெளிவந்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. காணொளியைப் பார்த்த பலர் குறித்த காவலாளி மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.https://www.facebook.com/share/v/1HNF9YFede/

Advertisement

Advertisement

Advertisement