• Mar 08 2026

மட்டக்களப்பில் தென்னிந்தியா பிரபலங்களின் மாபெரும் இசை விழா!

Ziya / Feb 18th 2026, 5:04 pm
image

தென்னிந்தியாவின் பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிக்கிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட மாபெரும் பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை நிலவி வரும் நிலையிலும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்கள் மத்தியில் இந்த பக்த இசை நிகழ்வு நடைபெற்றது.


மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


குறித்த நிகழ்வு கல்லடி கடற்கரையில் 15ஆம் திகதி தொடக்கம் சிவலிங்க தரிசனம் நடைபெற்றுவந்த நிலையில் இறுதி நாளான நேற்று மாலை இந்த பக்தி இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது ஆன்மீக ரீதியான கருத்துரைகளும் நடைபெற்றதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.


இதற்கான ஊடக அனுசரணையினை வீரகேசரியும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் தென்னிந்தியா பிரபலங்களின் மாபெரும் இசை விழா தென்னிந்தியாவின் பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிக்கிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட மாபெரும் பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை நிலவி வரும் நிலையிலும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்கள் மத்தியில் இந்த பக்த இசை நிகழ்வு நடைபெற்றது.மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.குறித்த நிகழ்வு கல்லடி கடற்கரையில் 15ஆம் திகதி தொடக்கம் சிவலிங்க தரிசனம் நடைபெற்றுவந்த நிலையில் இறுதி நாளான நேற்று மாலை இந்த பக்தி இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது ஆன்மீக ரீதியான கருத்துரைகளும் நடைபெற்றதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.இதற்கான ஊடக அனுசரணையினை வீரகேசரியும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement